வார ராசிபலன்கள்

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ பிப்.26 - மார்ச் 4

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம்:
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பண வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

கலைத் துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல் மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும்.

          

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகு பலனைப் பெறுவீர்கள். விநாயகர், துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

பூசம்: இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமைந்து பலமும், வளமும் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

ஆயில்யம்: இந்த வாரம் கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனை அடைவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலை நல்லமுறையில் அபிவிருத்திச் செய்ய முடியும்.

பரிகாரம்: காஞ்சி காமாட்சியை பூஜித்து வணங்கி வர மன குழப்பம் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.

சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமையை அதிகமாகும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். பெண்களுக்கு காரியங்களில் இருந்த தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.

கலைத் துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான பொருள்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும்.

மகம்: இந்த வாரம் பெரிய ஆர்டர்களும் கிடைக்கப்பெற்று உங்களின் தகுதியும், தரமும் உயரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்த முடியும். பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் உங்களின் லாபத்தை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும்.

பூரம்: இந்த வாரம் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். சர்ப்பசாந்தி செய்வது, சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படும். சுக வாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். பண வரவுகளும் சுமாராகவே இருக்கும்.

பரிகாரம்: நந்தீஸ்வரரையும், சிவனையும் வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக் கவலை அகலும்.

கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் நிம்மதியும், சுகமும் அதிகமாகும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்தி சாதூரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

வீண் பழி ஏற்படாமல் தடுக்கப்படும். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விவகாரங்கள் வரலாம். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கணவன்- மனைவிக்கு இடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் சில நேரங்களில் உங்களுக்கே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

அஸ்தம்: இந்த வாரம் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்னே அனுகூலப் பலனை அடைய முடியும். எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப் பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப் பளு குறையும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை பூஜித்து வணங்கி வர குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT