மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
கிரகநிலை: ராசியில் சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றம்: 06-12-2022 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். பெண்களுக்கு உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்கு எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.
பரிகாரம்: சனிபகவானுக்கு எள் சாதம் நைவேதியம் செய்து காகத்திற்கு வைக்க பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.
********************
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கிரகநிலை: ராசியில் சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் புதன் - விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றம்: 06-12-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அவர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். புதிய வீடு மனை வாகன ப்ராப்தம் ஏற்படும். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கலைத்துறையினர் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். மாணவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.
********************
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை: ராசியில் குரு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் சந்திரன் - என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றம்: 06-12-2022 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். ஆனாலும் மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். அதற்கான ஊதியமும் கிடைக்கும்.
குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்
பரிகாரம்: முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |