மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் செவ்வாய், ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - சுகஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகநிலை உள்ளது.
பலன்: இந்த வாரம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் பின்னர் வேகம் பிடிக்கும். வீண் மனசஞ்சலம் உண்டாகும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர் பிடிக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளை தாமதம் இல்லாமல் முடிக்க பாடுபடுவார்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குழந்தைகளால் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நினைத்ததை சாதிக்கும் மனவலிமை உண்டாகும்.
பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். வீண் கவலை ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பணிகளை தாமதம் இல்லாமல் முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பரிகாரம்: சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி நவகிரகத்தில் செவ்வாயை வழிபட துன்பங்கள் நீங்கும். இன்பங்கள் உண்டாகும்.
***********
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ என கிரகநிலை உள்ளது.
பலன்: இந்த வாரம் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் கூடும். காரிய தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்க தூண்டும். கடன் தொல்லை குறையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்த சேரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் எண்ணப்படி பொருட்கள் வாங்க நேரும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள்.
உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். தடை நீங்கி பணிகள் வேகம் பிடிக்கும். செல்வாக்கு கூடும். மாணவர்கள் பல தடைகளையும் தாண்டி கல்வியை கற்று வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.
பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்கவும். சுக்கிர பகவானுக்கு மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கினால் மனது மகிழும் படியான அளவில் காரியங்கள் நடக்கும். கடன் பிரச்சனை தீரும்.
***********
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: ராசியில் சூர்யன், சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ என கிரகநிலை உள்ளது.
பலன்: இந்த வாரம் மனோதைரியம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. திடீர் உடல்நலபாதிப்பு ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. நிதானமான போக்கு காணப்படும். பணவரத்து தாமதப்படும்.
தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நினைப்பதை தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலை பளுவால் மனசலிப்பும் உண்டாகும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன்-மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் மாறி சகஜ நிலை ஏற்படும்.
குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். பயணங்கள் தாமதப்படும். பெண்களுக்கு வீண் அலைச்சலும், காரிய தாமதமும் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை தேவை. மாணவர்கள் வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.
பரிகாரம்: மதுரை மீனாட்சியையும் சொக்கநாதரையும் வணங்கி வருவதுடன் நவகிரகத்தில் புதனுக்கு பச்சை பயிறு சுண்டல் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்க வாழ்க்கை வளம் பெறும். மனதில் நிம்மதி ஏற்படும்.
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 14 - 20
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |