- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது. பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்,
பரிகாரம்: முன்னோர்களை தினமும் வணங்கி வர எல்லா பிரச்சினைகளிலும் சுமுக முடிவு ஏற்படும். காரிய தடைகள் நீங்கும்.
*********************
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
இந்த வாரம் சுபச்செலவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும்போது எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனக்கவலை ஏற்படலாம். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கலைத்துறையினருக்கு லாபகரமாக நடக்கும்.
வாக்குவன்மையால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அரசியல்வதிகள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். தடைப் பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: சிவன் கோயிலில் இருக்கும் துர்கை அம்மனை பூஜித்து வணங்கி வர காரியங்கள் சாதகமாக முடியும். கடன் பிரச்சினை தீரும்.
************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |