- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
இந்த வாரம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். திட்டமிடாத செயல்களால் வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. மேலிடம் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு கேட்பது சிறந்தது. சக பணியாளர்களிடம் மேலிடம் பற்றி குறை கூறாமல் இருப்பது நல்லது.
குடும்ப நிம்மதி குறையக்கூடும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். உறவினர்கள் வகையில் வீண் கருத்து மோதல்கள் ஏற்படலாம். பெண்களுக்கு செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினர் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் கருடாழ்வாரை தினமும் வழிபட பொருளாதாரச் சிக்கல்கள் அகலும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
***************
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
இந்த வாரம் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரத்தால் வீண் பகை உண்டாகலாம். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாகச் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் அகலும். பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போதும் வாங்கும்போதும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
பணத்தைக் கையாளும் போது கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.
பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதன் மூலம் எதிர்ப்புகள் விலகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும்.
**********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |