- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
இந்த வாரம் பல வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். வாக்கு கொடுக்கும் முன் யோசிக்கவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். வேலையில் மாற்றம் உண்டாகலாம். பயணச் செலவு உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம்.
குடும்பத்தில் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று செவ்வரளி மலரை அர்ப்பணித்து வர இடர்பாடுகள் அகலும். பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும்.
*******************
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த காரியத் தடைகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சினைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தடைபட்டிருந்த கல்வி உய்வு பெறும்.
பரிகாரம்: பெருமாள் ஆலயத்தில் இருக்கும் தாயாரை வழிபட மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
**************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |