வார ராசிபலன்கள்

தனுசு, மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! ஜனவரி 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

தனுசு:


தொழிலில் உன்னத நிலையை அடைய விரும்பும் தனுசு ராசி அன்பர்களே!


இந்த வாரம் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து வருவது அவசியம். திருமண வயதில் உள்ள தனுசு ராசி அன்பர்களுக்கான வரன் தேடும் முயற்சி தடைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இவ்வாரம் சற்று கவனமாக இருந்து வருவது நல்லது. தாங்கள் செய்த சிறு தவறை கூட சக ஊழியர்கள் பெரிதுபடுத்தி காட்டுவார்கள். அது மேலிடத்தில் தங்கள் மீதுள்ள நல்ல அபிப்ராயத்தை பாதிக்கும். தொழிலில் முன்னேற்றம் எதையும் இந்த வாரத்தில் எதிர்பார்க்க முடியாது. சற்று பொறுமையாக இருந்து வரவும். மற்றபடி தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தொடரவும். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களிடமோ அல்லது குடும்ப நண்பர்களிடமோ கோபப்பட்டு பேசி வீண் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள்.

வேலை காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காக கணவன்-மனைவி இவ்வாரம் பிரிந்திருக்க நேரிடும். மாணவமணிகள் விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தருணத்தில் தங்கள் மனதினை முழுவதுமாக கல்வியில் செலுத்துவது அவசியம். பெண்கள் கடின உழைப்பு ஏற்படக்கூடும். எதிர்பார்த்த விஷயங்கள் நடப்பது சற்று கடினமே. தேவையான பொருட்கள் வாங்குவதற்கு செலவுகள் செய்ய வேண்டியிருக்கும்.


பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வாருங்கள்.
****************************

மகரம்:


மந்திர வார்த்தைகளால் பிறர் மனதை கொள்ளையடிக்கும் மகர ராசி அன்பர்களே!


இந்த வாரம் வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நிறுவன மாற்றமோ அல்லது ஊர் மாற்றமோ ஏற்படக்கூடும்.அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். நன்கு அறிமுகமான நபர்கள் சிலர் தங்களுக்கு உதவுவார்கள். தொழிலில் புதிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கவனம் தேவை.அவசர முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் கவனம் தேவை. சக பாகஸ்தர்களிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக செலவு செய்து மாற்றங்களை செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.

மாணவமணிகள் வெளிநாடு சென்று கல்வி பயில விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவமணிகளுக்கு நற்செய்தி ஒன்று இந்த வாரம் தேடி வரும். விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால் அதுவும் கிடைப்பதற்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வேலைக்கு சென்று வரும் பெண்கள் சிலருக்கு பணி மாறுதல் உண்டு. ஆனாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.


பரிகாரம்: நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சினை தீரும். குடும்ப குழப்பம் தீரும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT