வார ராசிபலன்கள்

கும்பம், மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - ஜனவரி 13 முதல் 19ம் தேதி வரை

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)


கும்ப ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 12ல் இருப்பதால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறைச் சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துகளில் வரும் வருமானம் குறையலாம். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையைக் கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எந்தக் காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு இருந்த பிரசசனை குறையும். அரசியல்துறையினருக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியைத் தரும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
******************************************************************


மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


மீன ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் வாக்குவன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சூரியன் சஞ்சாரம் அனுகூலமான பலன்களை தரும். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரத்தால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு இருந்த சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். பெண்களுக்கு எல்லாக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT