மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்: இந்த வாரம் எதை பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பண வரத்து இருந்த போதிலும் எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும்.
தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன்- மனைவிக்கிடையே சிறுபூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது. பெண்கள் எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதைக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும். மாணவர்கள் கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.
அஸ்வினி: இந்த வாரம் தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது.
பரணி: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும்.
கிருத்திகை: இந்த வாரம் உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்: இந்த வாரம் உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களை சுற்றி வருபவர்களால் செலவு உண்டாகும் கவனம் தேவை. திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம் சண்டை உண்டாகலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தை கடை பிடிப்பது வீண் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும்.
வாழ்க்கை துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்கள் வீண்பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. மாணவர்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
கிருத்திகை: இந்த வாரம் தடைகளை தாண்டி செய்யும் முயற்சி வெற்றி பெறும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும்.
ரோகினி: இந்த வாரம் வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.
மிருகசீரிஷம்: இந்த வாரம் உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சினை தீரும்.
மிதுனம் (மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழிதெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.
பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்யம் அடையும் சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலைதூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.
மிருக சீரிஷம்: இந்த வாரம் ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும்.
திருவாதிரை: இந்த வாரம் திறமை வெளிப்படும். எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். பணவரத்து சீராக இருக்கும். வேலைப் பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும்.
புனர்பூசம்: இந்த வாரம் அக்கம்பக்கத்தினரிடம் சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். மனோ தைரியம் கூடும். | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |