- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
அஸ்வினி -
மனசஞ்சலம் இருந்தாலும் நம்பிக்கை குறையாது. சட்டென எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தார் பற்றிய கவலை அதிகரிக்கும். குழந்தைகள் சொல் பேச்சு கேட்கவில்லையே என்ற ஆதங்கம் உண்டாகும். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகள் வெளிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபாடு காட்டுவார்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
புதிய முயற்சிகள் சாதகமாக இருக்கும். பண உதவிகள் கிடைக்கும். மனதளவில் நம்பிக்கை உண்டாகும்.
செவ்வாய்-
மனக்குழப்பம் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் பற்றி கவலை ஏற்படும். நாளின் முடிவில் நிம்மதி ஏற்படும். கவலைகள் மறையும்.
புதன்-
அலுவலக வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். வியாபார உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
வியாழன்-
வெளியிடங்களுக்கு எங்கும் செல்ல வேண்டாம். தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். வாட்ஸ்அப் வதந்திகளை நம்ப வேண்டாம். மனதில் சஞ்சலம் உண்டாகும். குடும்பத்தாரிடம் கோபத்தை காட்டாமல் அன்பாக இருங்கள்.
வெள்ளி-
சுப விஷயங்கள் பேசி முடிப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வகையில் நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். பணி தொடர்பான சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தார் தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.
ஞாயிறு-
உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு கொடுங்கள். எதிர்கால திட்டங்கள் தீட்டுவீர்கள். நினைத்த காரியம் நினைத்தபடியே முடியும்.
வணங்கவேண்டிய தெய்வம்-
கந்த சஷ்டி கவசம் படியுங்கள். மன நிம்மதி கிடைக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.
*************************************************************
பரணி -
உற்சாகமாக இருப்பீர்கள். கவலைகளை மறந்து பணியில் கவனம் செலுத்துவீர்கள்.
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒரு சில பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சில சலசலப்புகள் ஏற்பட்டாலும் சமாதானம் ஆகும்.
இந்த வாரம் -
திங்கள்-
நிதானமாக இருங்கள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பொறுமை மிக மிக அவசியம். வாழ்க்கைத்துணையிடமும், பிள்ளைகளிடமும் எரிச்சலை காட்டாமல் இருக்க வேண்டும். பயணங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
செவ்வாய்-
வேண்டிய உதவிகள் கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும். குழப்ப நிலைகள் மாறும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.
புதன்-
பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் ஒரு சில நிர்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பாக ஒரு சில பண இழப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
வியாழன்-
ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய நிலுவைத்தொகை வரும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும்.
வெள்ளி-
பேசும்போது நிதானமாக இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். வெளியில் செல்லும்போது அக்கம்பக்கத்தினருடன் கவனமாக பழகுங்கள். சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். சமூக வலைதள பயன்பாட்டில் சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு ஆதரவு தர வேண்டாம்.
சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் இன்று கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான சலுகைகள் கிடைக்கும். ஒருசிலருக்கு வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்கள் உறுதியாகும். வியாபார விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.
ஞாயிறு-
எதிர்பாராத பண வரவு ஏற்படும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவீர்கள். பெண்களுக்கு சகோதர வழியிலிருந்து ஒரு சில உதவிகள் கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் தொடரும். மனக் குழப்பங்கள் தீரும்.
********************************************************
கார்த்திகை-
பொறுமை நிதானம் மிக மிக அவசியம். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
ஆரோக்கிய பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் தீரும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் பேசி தீர்க்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெண்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு புதிதாக கலை தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள்-
மனநிம்மதி ஏற்படும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த சலசலப்புகள் அகலும். பிள்ளைகள் கல்வி தொடர்பான உதவிகளை உங்களிடம் கேட்டு பெறுவார்கள். எனவே பிள்ளைகளை நினைத்து பெருமை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான தகவல் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
செவ்வாய்-
மற்றவர்கள் உங்களை கோபப்படுத்தி பார்ப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். மன சஞ்சலம் ஏற்படும். பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது.
புதன்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். லாபம் இருமடங்காக கிடைக்கும்.
வியாழன்-
மற்றவர்களுக்கு உதவி செய்து மனம் மகிழும் நாள். செலவுகள் ஏற்பட்டாலும் மன நிறைவு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
வெள்ளி-
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். உங்களைப் பற்றி அவதூறுகள் அனைத்தும் முடிவுக்கு வந்து மன நிம்மதி அடையும் நாள். தொழில் தொடர்பாக அரசு உதவி கிடைக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.
சனி-
பொறுமையாக இருந்து காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் நீங்களாக சிக்கிக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் கருத்து சொல்லாமல் இருக்க வேண்டும். நண்பர்களோடு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஞாயிறு-
குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவீர்கள். வீட்டு பராமரிப்புகளை நீங்களே முன்னின்று செய்வீர்கள். நண்பர்களிடம் இருந்து சாதகமான நல்ல தகவல் கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
சண்முகக் கவசம் பாராயணம் செய்யுங்கள். ஆரோக்கியம் மேம்படும். குழப்பங்கள் தீரும். மன நிம்மதி கிடைக்கும்.
*************************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |