துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பஞசம ஸ்தானத்தில் சனி, ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்.
பலன்கள்: அனைவரையும் சரிசமமாக பாவிக்கும் துலா ராசி அன்பர்களே நீங்கள் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு குடும்ப நலம் சீராக இருக்கும். சங்கடங்களைச் சமாளிக்கக்கூடிய துணிவு பிறக்கும். பொருளாதார நிலையில் கெடுதல் ஏற்படாமலும் காப்பாற்றப்படுவீர்கள். இந்த நற்பலன்கள் ஏற்படுவது உறுதி. இதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
அலைச்சலும் தவிர்க்க முடியாமற் போகும். உடல் நலம் பாதிக்கப்பட இடமுண்டு. கவனம் தேவை. உறவினர்கள் மூலம் ஏதேனும் தொல்லை உண்டாகலாம். அதையும் சமாளித்து விடுவீர்கள். கவலை வேண்டாம். பணச்சங்கடம் வராமல் இருக்க வாய்ப்புண்டு. பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். தெய்வப் பணி, தருமப்பணிகளில் ஈடுபட்டுவந்தால் கவலை குறையும்.
உத்தியோகத்தில் தெம்பும், தைரியமும் அதிகம் ஏற்படும். இயந்திரப் பணியில் ஈடுபட்டுள்ளோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோருக்குக் குறை உண்டாகாது. நன்மையும், தீமையும் கலந்தவாறு நடக்கும்.
வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. அலைச்சல் தவிர்க்க முடியாமற் போகலாம். விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருந்தால் எந்த வில்லங்கமும் வராமல் காத்துக் கொள்ளலாம். மருத்துவர்கள், பொறியியல் துறை வல்லுநர்கள் புதிய முயற்சியில் ஈடுபடலாம்.
அரசியல்வாதிகளுக்குச் சோதனை ஏற்படலாம். மனத்துக்கு மிகுந்த சங்கடம் உண்டாகக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஏற்படலாம். ஆனால் எதையும் துணிவோடு சந்திக்கும் ஆற்றல் ஏற்படவும் இட முண்டு. தெய்வ காரியங்களில் ஈடுபட்டு வந்தால் தொல்லை குறையும்.
கலைத்துறை நல்ல விதமாக நடக்கும். எதிர்த்துப் போராடி சிற்சில பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். பொதுவாக அலைச்சலும், கடும் உழைப்பும் தவிர்க்க முடியாத நேரம்தான் இது. துணிவுடன் எதையும் எதிர் நோக்கம் ஆற்றல் இருக்கும்.
பெண்களுக்கு கணவன் - மனைவி உறவு களிப்புடன் விளங்கும். பந்துக்களால் ஏதேனும் பிரச்சினை உண்டாகலாம். கவனமாக இருங்கள். உங்களுடைய கவுரவம் ஓங்கும். பொருளாதார வளர்ச்சி குடும்ப நலம், தொழில் வளம், பதவி உயர்வு போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
மாணவர்கள் அளந்து பேசினால் நன்மை பெருகும். நற்காரியங்களை உத்தேசித்து நல்ல மனதோடு அணுகும் விஷயங்களில் வெற்றி உண்டாகும். புதிய சிநேகிதம், புதியவர்களுடன் எந்தவிதத்திலும் தொடர்பு கொள்வது போன்றவற்றை அறவே நீக்க வேண்டும். மீறினால் ஏமாற்றப் படுவீர்கள்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு தொழிலில் மிகுந்த அக்கறையுடன் இருப்பது அவசியம். வியாபாரிகளுக்குப் அனுகூலமாக இருக்கும். வியாபாரிகளுக்கு சிறு நஷ்டம் இருக்குமானாலும் பின்னர் ஆதாயமாக இருக்கும். விவசாயிகளுக்குப் பிரச்சினை உண்டாகாது. கலைத்துறை சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் பிரச்சினைகள் உருவாகாது போக இட முண்டு. உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். மனதில் சில குறை உண்டாகலாம். அதை சரி செய்து விடுவீர்கள். பணக் கஷ்டம் இருக்காது. ஆனால், உழைப்பு அதிகமாக இருக்கும். அலைச்சல் இருக்கும்.
சுவாதி: இந்த ஆண்டு உடல் நலம் சீராக இருக்கும். மிகவும் உன்னதமான நேரம் நடந்து கொண்டிருக்கிறது. திருமணம், மகப்பேறு போன்ற பாக்கியங்கள் உண்டாகலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலையும் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரும். விவசாயிகளுக்குப் பிரச்சினை ஏதும் உருவாகாது. என்றாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இழிச்சொல்லுக்கு உள்ளாக நேரலாம். எச்சரிக்கை தேவை.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு தம்பதியரிடையே மகிழ்ச்சி மேலோங்கும். தகாத காரியங்களைச் செய்யச் சொல்லி உங்களைத் தடுமாற்றத்துக்கு உள்ளாக்கும் க நிலைமை வரலாம். எச்சரிக்கை. அன்றாடப் பணிகளில் சிரத்தையுடன் செயலாற்றுங்கள். தப்பித்துக் கொள்ளலாம். தொழிலாளர்களுக்கு விசேட நற்பலன்கள் உண்டாகும். திருமணம் போன்ற நற்காரியங்கள் நிகழவும் வாய்ப்புண்டு. கலைத்துறை சம்பந்தப்பட்ட பணிகள் சுறுசுறுப்படையும். கணவன் மனைவி உறவு களிப்புடன் விளங்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள் | சிறப்பு பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் பச்சரிசி சாதம், வெல்லம், எள், நல்லெண்ணெய் கலந்து காக்கைக்கு வைக்கவும் | அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு | செல்ல வேண்டிய தலம்: கஞ்சனூர், திருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர் | சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் லம் ஸ்ரீகமலதாரிண்யை நம:” |
இந்த ஆண்டு துலா ராசிக்கான கிரகங்களின் நிலை
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சனி, ராகு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்.
பலன்கள்: எடுத்த வேலையை கன கச்சிதமாக முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு பல நன்மைகள் விளையக்கூடிய நேரம் இது. தகுதி வாய்ந்தவர்கள் பாராட்டப்படுவார்கள். உங்களுடைய ஆதாயமான நிலைக்கு அடிகோலும் விதமாக சில காரியங்கள் நடக்கும். புதிய சகவாசத்தை புறக்கணியுங்கள், செல்வாக்கு அதிகமாகும். செல்வம் சேரும். பழைய பாக்கி வசூலாகும்.
குடும்பத்தில் திருமணம், மகப் பேறு போன்ற பாக்கியங்கள் ஏற்படலாம். பதவி உயர்வு கிட்டும். உடல் நலனை கவனிக்கவும். குடும்ப நலம், தாம்பத்திய சுகம் எல்லாம் சீராக அமையும். வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்து கொண்டால் நலம் பெருகும். தப்பித் தவறியும் தவறான செய்கைக்கு இடம் கொடுத்தால் இழிநிலை உண்டாகும். கடன் தொல்லை இருக்கு மாதலால் சமாதான முறையில் பேசிச் சமாளிக்க வேண்டியது அவசியம்.
உத்தியோகஸ்தர்களுக்கு முன் விரோதம் காரணமாக ஒரு சச்சரவு உண்டாகலாம். அதை பொறுமையுடன் சமாளித்தால் வெற்றி நிச்சயம். விரும்பிய பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். கவலை வேண்டாம். முதலாளி - தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும்.
வியாபாரிகள் இரட்டிப்பு லாபம் காணவும் வாய்ப்புண்டு. வில்லங்கம் ஏதும் உருவாகாது. தொழில் சிறப்படையும். தொழிலில், வியாபாரத்தில், விவசாயத்தில் எதிராளியின் தொல்லை காணாமல் போகும். வியாபாரிகளுக்கு நஷ்டம் தவிர்க்க முடியாமற் போகலாம். எனினும் அதை சமாளிக்கும் சூழ்நிலையும் உருவாகும்.
அரசியல்வாதிகள் பாராட்டுப் பெறுவார்கள். கற்றறிந்த மேலோர் கவுரவிக்கப்படுவர். மிகவும் நெருக்கடியான உருவானாலும் அதை எச்சரிக்கையுடன் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். பல விதமான சங்கடங்கள் தோன்றினாலும் உண்மைத் தொண்டர்களின் உதவியுடன் அதை சமாளிப்பீர்கள்.
கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். தொழிலில் ஏற்றமும், தொழிலாளர்களுக்கு சந்தோஷமும் உண்டாகும். கற்றறிந்த வல்லுநர்களுக்கு உரிய கவுரவம் கிடைக்கத் தடை இருக்காது. விருதுகள், பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் உழைப்பு அறியப்படும்.
பெண்களுக்கு குடும்பத்தில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்படலாம். உடல் நலம்கூட பாதிக்கப்பட இட முண்டு. குறுக்கு வழியில் ஈடுபடாதீர்கள். பெரியோர் நல்லாசியைப் பெறுவதில் குறியாயிருங்கள். தெய்வ சிந்தனையோடு இருங்கள்.
மாணவர்களுக்கு சோதனை மிகுந்து காணப்படும் நேரம் ஆதலால் பொறுமையுடன் இருங்கள். பெரியோர் ஆலோசனையின்படி நடக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் தொல்லை குறையும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த ஆண்டு கடன் தொல்லை தீரும். முன் விரோதம் காரணமாக இருந்து வந்த சில சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். உடல் நலம் முன்னேற்றமடையும். பொதுவாகச் சங்கடங்கள் பல ஏற்படுமானாலும், அதனைச் சமாளிக்கும் ஆற்றலும் கிடைக்கும். கொடுக்கல் - வாங்கல் சீராக இருக்கும். குடும்ப நலனில் அக்கறை செலுத்துங்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்குப் பிரச்சினை உண்டு. பொறுமையுடன் நடந்து கொண்டு, சமாளிக்க வேண்டியது அவசியம். தொழிலாளர்கள் பணிபுரியும் போது கவனமாக இருப்பது அவசியம்.
அனுஷம்: இந்த ஆண்டு நற்பலன்களும், தீய பலன்களும் கலந்தவாறு இருந்து வரும். இருந்தாலும் எதையும் சமாளிக்கக் கூடிய வகையிலேயே தொல்லைகளின் தன்மை இருந்து வரும். மனம் தான் சற்று சஞ்சலத்துக்கு உட்பட நேரும். தெய்வப் பணிகளில் ஈடுபட்டு மனோதிடம் பெற முயலுங்கள். அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருந்தால் அவப் பெயரில் இருந்து தப்பிக்கலாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தோன்றலாம். சாமர்த்தியமாக அவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலையில் சரிவு ஏற்பட இடமில்லை.
கேட்டை: இந்த ஆண்டு நன்மைகள் உண்டாக வாய்ப்புண்டு. பொதுவாகச் சில சங்கடங்கள் இருக்கும். பெரிய மனதோடும் தெய்வ பக்தியோடும் இருந்து அவற்றைச் சமாளிக்கவும். மனத்தை மட்டும் தளரவிடாதீர்கள், அரசு அலுவலர்களுக்குப் பிரச்சினை இருக்காது என்றாலும் ஒரு விதமான பீதி இருந்து வரும். சாமர்த்தியமாக நடந்து கொண்டால் அரசியல்வாதிகள் அவமானப் படக்கூடிய நிலையில் இருந்து தப்பிக்கலாம். குடும்பத்தில் சச்சரவுக்கு இடம் அளிக்காதீர்கள். வியாபாரிகளுக்குப் பாதிப்பு ஏற்படாது. செய்யும் தொழிலில் சிக்கல் வராது. கொடுக்கல்-வாங்கலில் நிதானம் தேவை.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும் | சிறப்பு பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளுக்கு எலுமிச்சையில் விளக்கு ஏற்றி வழிபடவும் | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு | செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், மதுரை, திருவெற்றியூர் | சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஸ்ரீஅம்பிகாயை நம:” |
இந்த ஆண்டு விருச்சிக ராசிக்கான கிரகங்களின் நிலை
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்.
பலன்கள்: நேர்மையுடனும் தீரத்துடனும் நடந்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு பொருளாதார நிலையில் எந்தச் சிக்கலும் வராது. அன்றாடப் பணிகள் நிறைவேறும். ஆனால், அதற்காக அதிகப்படியாக உழைக்க வேண்டியிருக்கும். பெரியோர் நல்லாசியைப் பெற்று வாருங்கள். தருமப் பணிகளில் ஈடுபட்டு வாருங்கள்.
உங்களுடைய வாழ்வில் உன்னத நிலை அடையக் கூடிய சந்தர்ப்பங்கள் கனிந்து வரும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு உண்டாகும். பணம் சேரும். பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வரலாம். அதனால் பயன் உண்டாகவும் வாய்ப்புண்டு. குடும்ப சுபிட் சம் சீராக இருக்கும். செல்வ நிலை, குடும்ப சுபிட்சம், தாம்பத்திய மகிழ்ச்சி எல்லாம் சீராக இருக்கும். கணவன் - மனைவி இடையே கருத்து வேற்றுமை எழ இடம் தராதீர்கள். பிள்ளைகளை சற்று கவனமுடன் கண்காணிப்பது அவசியம்.
உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்துக் கண்டிக்க நேரலாம். நண்பர்களில் நல்லவர்களை இனம் கண்டு பழகினால் தொல்லை இல்லை. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் மிகுந்த எச்சரிக்கையுடன் கடமையாற்ற வேண்டியிருக்கும்.
வியாபாரிகளுக்கு அளவான லாபம் தடைபடாது. விவசாயிகளுக்குப் பிரச்சினை ஏதும் உருவாகாது. உபத்திரவம் அவ்வளவாக இருக்காது. இயந்திரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் தொல்லை இல்லை. ஆதாயம் ஏற்பட இடமுண்டு. தொழில்கள் மேன்மையடையும். முதலாளி - தொழிலாளி உறவு பலப்படும்.
அரசியல்வாதிகள் அவசரப்படாமல் காரியமாற்றி நற்பெயரைக் காத்துக்கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பல விதமான நற்பலன்கள் ஏற்படக் கூடிய நிலை உண்டென்றாலும், அந்த நன்மைகளைப் பெறுவதில் ஒரு கட்டுப்பாடு இருக்கும்.
கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். உழைப்பாளிகளுக்குச் சோதனை இருக்காது. என்றாலும் கடுமையாக உழைத்து உரிய வருவாயைப் பெற வேண்டியிருக்கும். ஓரிரு சங்கடங்கள் ஏற்படுமானாலும், சாமர்த்தியமாக அதனைச் சமாளிக்கக் கூடிய வழியும் புலப்படும்.
பெண்களுக்கு கவுரவம் ஓங்கும். புகழ் கிடைக்கும். பணக் கஷ்டம் உண்டாகாது. முயற்சிகள் தீவிரம் அடையும். சுறுசுறுப்போடு இயங்கக் கூடிய உங்களை, சில தீய நண்பர்கள் திசை திருப்பி விட நேரலாம். நல்லவர்களை இனம் கண்டு இயங்குங்கள். பெரியோர் நல்லாசியைப் பெறுங்கள்,
மூலம்: இந்த ஆண்டு தொழிலில் தொய்வு உண்டாகாமல் காக்கும். வியாபாரிகளுக்குப் லாப கரமாக அமையும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் வரும். மகசூல் திருப்தி தரும். மருத்துவர்கள் புகழ் பெறுவர். முதலாளி - தொழிலாளி உறவில் சிக்கல் உண்டாகாது என்றாலும் சலசலப்பு ஏற்பட இடம் தர வேண்டாம். குடும்ப விஷயங்கள் எல்லாம் சீராக அமையும். நற்பலன்கள் விளைவதில் ஒரு கட்டுப்பாடு இருக்கவே செய்யும். குறிப்பாக யாரிடமும் தகராறு செய்யாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
பூராடம்: இந்த ஆண்டு உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடுமையாக உழைக்க வேண்டிய நிலை இருப்பதால் கண் வலி, நரம்புத் தளர்ச்சி போன்ற உபாதைகளுக்கு உள்ளாக நேரலாம். எனவே நேரம் பார்த்து உணவு உட்கொள்வதும், ஓய்வு எடுப்பதும் அவசியம். கலை, கல்வித்துறைப் பணிகள் மேலோங்கும். அன்றாட வாழ்வு பாதிக்கப்படாது. பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்ப சுபிட்சம் நல்ல விதமாகவே இருக்கும். அளந்து பேசுவது மிகவும் அவசியம். அவசரப்படாமல் இருப்பதும் அவசியம்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த ஆண்டு யாரிடமும் மனஸ்தாபம் வராமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உண்டு. அதனால் நற்பலனும் உண்டாகும். உடல் நலம் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும் பிறகு பூரண குணம் பெறும். எது எப்படியிருந்தாலும் அன்றாட வாழ்வில் சுபிட்சம் பாதிக்கப்படாது. கலை, கல்வி சம்பந்தப்பட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்குப் புகழ் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் முதலியவர்களுக்கு ஏற்றம் உண்டு. லாபமும் இருக்கவே செய்யும். குடும்ப நலம், தாம்பத்திய சுகம் எல் லாம் சீராக இருக்கும்.
பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும் | சிறப்பு பரிகாரம்: சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும். ஊற வைத்த் நாட்டு கொண்டைக்கடலையை (மூக்கடலை) உங்கள் கையால் கோர்த்து குருவிற்கு அர்ப்பணிக்கவும் | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு | செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், திருவானைக்காவல் | சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் சம் குருவே நம:” |
இந்த ஆண்டு தனுசு ராசிக்கான கிரகங்களின் நிலை