- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அஸ்தம்
சந்திரனை நட்சத்திரநாதனாகக் கொண்ட அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
இந்த ஆண்டு பல வகையிலும் நற்பலன்கள் ஏற்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். கவனமாகப் பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம்.
வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவச் செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை.
பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் புதிய பதவிகளை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு பணவரவு ஏற்படும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
மதிப்பெண்கள்: 69% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
*********************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |