- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகம்:
கேதுவை நட்சத்திரநாதனாகக் கொண்ட மகம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
இந்த ஆண்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுபறியாக இருந்து முடிவில் சாதகமான பலன் தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்பக் கவலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சைக் கேட்டு நடப்பது திருப்தி தரும். பெண்களுக்கு காரியங்களைச் செயலாற்றுவதில் மெத்தனப் போக்கு காணப்படும்.
கலைத்துறையினருக்கு அதிக பயணங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். மாணவர்களுக்கு முன்பு படித்தது இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும். எச்சரிக்கையாகப் பேசுவது நல்லது.
பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும்.
பரிகாரம்: விநாயகரை வணங்கி வர காரியத் தடை நீங்கும். குடும்பப் பிரச்சினை தீரும்.
மதிப்பெண்கள்: 72% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
************************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |