சிறப்பு பலன்கள்

2022  எப்படி இருக்கும்? அஸ்வினி நட்சத்திர அன்பர்களே! பணம் வரும்; திட்டம் நிறைவேறும்; கோபம் வேண்டாம்; எதிர்பார்த்த உதவி! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


அஸ்வினி:


கேதுவை ராசிநாதனாகக் கொண்ட அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!


இந்த ஆண்டு மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும். தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.

குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கலைத்துறையினர் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

பொதுவாக இந்த ஆண்டு உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும்.
பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சினை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.
மதிப்பெண்கள்: 74% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
******

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT