சிறப்பு பலன்கள்

பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்  2021 -2022; பூரட்டாதி அன்பர்களே! ஆரோக்கியத்தில் கவனம்; பக்தி நாட்டம்; கவலை தீரும்; வீண் மனஸ்தாபம்! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூரட்டாதி:

கிரகநிலை:

ராகு பகவான் ஏழாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் இருபத்தி ஐந்தாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

கிரகமாற்றம்:

பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் ஆறாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

கொடுத்த வாக்கினை உயிருக்குச் சமமாக மதிக்கும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே!

இந்த வருடத்தில் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப் பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

பெண்கள் அடுத்தவர்களிடம் பேசும்போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரவில் தாமதம் இருக்கும்.
கலைத்துறையினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.

+: கவலைகள் அகலும்
-: முயற்சிகள் அதிகரிக்கும்
மதிப்பெண்: 69%
வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.
**************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT