- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அவிட்டம்:
கிரகநிலை:
ராகு பகவான் ஒன்பதாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் இருபத்தி மூன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் இருபத்தி ஏழாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் உங்கள் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
கிரக மாற்றம்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் உங்கள் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் எட்டாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள் :
வேகமான நடவடிக்கைகளால் எடுக்கும் காரியங்களில் லாபம் ஈட்டும் அவிட்ட நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடத்தில் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபடத் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியைத் தரும்.
பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு சனியின் சஞ்சாரம் யோக ஸ்தானத்தில் இருப்பதால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும்.
அரசியல்வாதிகளுக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். நிதானத்தைக் கடைபிடிப்பது வெற்றிக்கு உதவும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களைப் படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
+: புதிய பொறுப்புகள் கிடைக்கும்
-: வலியச் சென்று உதவுவதை தவிர்க்கவும்
மதிப்பெண்: 69%
வணங்க வேண்டிய தெய்வம்: காவல் தெய்வத்தை வழிபடுங்கள்.
**************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |