சிறப்பு பலன்கள்

பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்  2021 -2022; விசாகம் நட்சத்திர அன்பர்களே! லாபம் உண்டு; ஆரோக்கியம் கூடும்; பண வரவு திருப்தி; உத்தியோகத்தில் பாராட்டு! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விசாகம்:

கிரகநிலை:
ராகு பகவான் பதினாறாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் மூன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் ஏழாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் எட்டாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

கிரக மாற்றம்:

பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் எட்டாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் பதினைந்தாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்தாண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் உங்கள் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :
கொடுத்த வேலையை சரியான முறையில் முடிக்கும் திறன் படைத்த விசாக நட்சத்திர அன்பர்களே!

இந்த வருடத்தில் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்குத் தேவையான ஆடை அணிகலன்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும.
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம்.

அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.

+: சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.
-: பேச்சில் நிதானம் தேவை
பரிகாரம்: அருகிலுள்ள சிவன் ஆலயத்திற்குச் சென்று நவக்கிரகத்தில் இருக்கும் குருபகவானை தரிசித்து வாருங்கள். தடைகள் அனைத்தும் நீங்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்: சிவபெருமானை வழிபட்டு வாருங்கள். முக்கியமாக குலதெய்வ வழிபாட்டைச் செய்து வாருங்கள்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT