சிறப்பு பலன்கள்

பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்  2021 -2022; அஸ்த நட்சத்திர அன்பர்களே! எதிலும் கவனம் தேவை; தைரியம் கூடும்; விட்டுக்கொடுங்கள்; முயற்சிகள் ஜெயிக்கும்! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ஹஸ்தம்:

கிரகநிலை:
ராகு பகவான் பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் ஆறாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் பத்தாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் பதினொன்றாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

கிரக மாற்றம்:

பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் பதினொன்றாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் பதினெட்டாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் நான்காம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

பொழுதுபோக்கிற்கும் கேளிக்கைகளுக்கும் இடம் கொடுத்தாலும் செய்யும் வேலைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஹஸ்த நட்சத்திர அன்பர்களே!

இந்த வருடத்தில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனக்கஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.

பெண்களுக்கு மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும்.

கலைத்துறையினருக்கு புத்தி சாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தாங்கள் எடுக்கும் பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.

மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.

+: வீடு மனை விஷயத்தில் இருந்த தடைகள் அகலும்
-: எடுத்துக் கொண்ட காரியங்களில் கவனம் தேவை
மதிப்பெண்: 68%
வணங்க வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயரை வழிபடுங்கள். பிரத்தியங்கிரா தேவி முதலான உக்கிர தெய்வங்களை வழிபடுங்கள்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT