சிறப்பு பலன்கள்

பிலவ வருட பலன்கள்  2021 - 2022;  பூரம்  நட்சத்திர அன்பர்களே! எதிர்பார்த்த பணம் வரும்; டென்ஷன் உண்டு; வீடு மனை விஷயத்தில் கவனம்! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூரம்:

கிரகநிலை:
ராகு பகவான் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் எட்டாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் பன்னிரெண்டாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் பதிமூன்றாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

கிரகமாற்றம்:

பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் பதிமூன்றாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் இருபதாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் ஆறாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

உலக மக்கள் அனைவரையும் தன் மக்களாக பாவிக்கும் மனம் கொண்ட பூர நட்சத்திர அன்பர்களே!

இந்த வருடத்தில் எதிர்பார்த்த பணம் வரும். எதிர்ப்புகள் விலகும். வயிற்றுக் கோளாறு ஏற்படும். எந்தக் காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களைத் திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதிக் குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபட வேண்டி இருக்கும்.

பெண்கள் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. அடுத்தவர் பற்றிய விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது.
கலைத்துறையினர் வாகனத்தை ஓட்டும்போது கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு மனக் குழப்பம் நீங்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியைத் தரும்.

+: உறவுச்சிக்கல்கள் நீங்கும்
-: சுபகாரியங்களில் சுணக்க நிலை ஏற்படலாம்
மதிப்பெண்: 75%
வணங்க வேண்டிய தெய்வம்: ஸ்ரீஆண்டாள்
************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT