சிறப்பு பலன்கள்

பிலவ வருட பலன்கள்  2021 - 2022;  பூசம் நட்சத்திர அன்பர்களே! வீண் விமர்சனம் விலகும்; எதிர்பார்த்த பணவரவு; எதிர்ப்பு அகலும்; ஆரோக்கியத்தில் கவனம்! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூசம்:

கிரகநிலை:

ராகு பகவான் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் பதினொன்றாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் பதினைந்தாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் பதினாறாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

கிரகமாற்றம்:

பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் பதினாறாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் இருபத்தி மூன்றாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் ஒன்பதாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

கடினமான வேலைகளையும் புன்சிரிப்போடு செய்யும் திறன் படைத்த பூச நட்சத்திர அன்பர்களே!

இந்த வருடத்தில் மனக்கலக்கம் நீங்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி இருந்த நிலை அனைத்தும் நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவு, உடல் நல பாதிப்பு ஏற்படலாம்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.

பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனையைக் கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும்.

கலைத்துறையினருக்கு வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது.

அரசியல்வாதிகள் கடின உழைப்புக்குப்பின் முனனேற்றம் அடைவார்கள். உங்களுக்குப் பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.

+: வீடு மனை பாக்கியம் தடங்கல் நீங்கும்
-: மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடலாம்.
மதிப்பெண்: 69%
வணங்க வேண்டிய தெய்வம்: முருகப் பெருமானை வழிபடுங்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT