- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
புனர்பூசம்:
கிரகநிலை:
ராகு பகவான் இருபத்தி ஐந்தாம் நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் பனிரெண்டாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் பதினாறாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் பதினேழாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
கிரகமாற்றம்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் பதினேழாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் பத்தாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள் :
எந்தக் கடினமான சூழ்நிலையையும் நிதானமாகவும் நிறைவுடனும் அணுகும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடத்தில் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை இருக்கும். காரியத் தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாகப் பழகுவது அவசியம்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னச்சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.
கலைத்துறையினர் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு எந்தக் காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது.
மாணவர்களுக்கு கவனத்தை சிதறவிடாமல் வகுப்பைக் கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும்.
+: திருமணத் தடை அகலும்
-: எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனைகள் அவசியம்
மதிப்பெண்: 74%
வணங்க வேண்டிய தெய்வம்: நவக்கிரக குரு பகவானையும் சிவபெருமானையும் வழிபடுங்கள்.
*************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |