- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அஸ்வினி:
கிரகநிலை:
ராகு பகவான் நான்காம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - கேது பகவான் பதினெட்டாம் நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலும் - சனி பகவான் இருபத்தி இரண்டாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் இருபத்தி மூன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
கிரக மாற்றங்கள்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் இருபத்தி மூன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் மூன்றாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் பதினாறாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
தனது வைராக்கிய குணத்தால் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்ளும் அஸ்வினி நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடத்தில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வுகள் வரலாம். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். குரு சஞ்சாரத்தால் வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதுர்யமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணி தொடர்பாக அலைய நேரிடலாம்.
குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.
பெண்களுக்கு எடுத்த காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதுர்யமான பேச்சு வெற்றிக்கு உதவும்.
கலைத்துறையினருக்கு பொருளாதார உயர்வு, கடன்கள் குறையக் கூடிய அமைப்பு உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் மறையும்.
அரசியல்துறையினருக்கு பொருளாதார நிலை மிகச் சிறப்பாக அமையும். மேலிடத்துடன் ஒற்றுமை பலப்படும்.
மாணவர்களுக்கு பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.
+: தன்னம்பிக்கை உயரும்
-: குடும்பத்தில் முடிவெடுக்கும்போது கவனம் தேவை
மதிப்பெண்: 75%
வணங்க வேண்டிய தெய்வம்: மஹாகணபதி, வராஹர்.
***************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |