- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பூரட்டாதி:
சனி பகவான் உங்களின் இருபத்தி நான்காவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
குருவின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு பெரியோர் சொல்படி கேட்டு நடப்பது நன்மை தரும்.
இந்த சனிபெயர்ச்சியில் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப் பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர்ப் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். கவனம் செலுத்தினால் வெற்றி காணலாம்.
அரசியலில் உள்ளவர்களுக்கு எந்தவொரு காரியமும் சாதகமாக முடியும். பொறுமையுடன் செயல்படுவது அவசியம்.
பெண்கள் அடுத்தவர்களிடம் பேசும்போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரவில் தாமதம் இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிப்பது அவசியம்.
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வாருங்கள். பசு வழிபாடு செய்யுங்கள். பசுவுக்கு உணவளியுங்கள். மனக்குழப்பம் நீங்கும். தடைகள் அகலும்.
***************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |