சிறப்பு பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் ; பூராடம் நட்சத்திர அன்பர்களே! பண வரவு; எதையும் சமாளிப்பீர்கள்; காரிய அனுகூலம்; கூடுதல் உழைப்பு! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூராடம்:

சனி பகவான் உங்களின் இரண்டாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

குரு - சுக்ரன் இணைப்பில் பிறந்த உங்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இந்த சனிபெயர்ச்சியில் பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதுர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்படச் செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துகளைக் கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாக நிலை உண்டு. சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியைச் சரிசெய்வீர்கள்.

பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.

மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தைச் சிதற விடாமல் படிப்பது அவசியம்.

பரிகாரம்: பெருமாள் கோயில் சந்நிதி கொண்டிருக்கும் தாயாரை தினமும் வணங்கி வாருங்கள். பணம் சார்ந்த பிரச்சினைகள் அகலும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT