சிறப்பு பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் ; ரோகிணி நட்சத்திர அன்பர்களே! எதிர்பார்த்த பண வரவு; சிக்கனம் தேவை; திடீர் டென்ஷன்; சக ஊழியர்களால் உதவி! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரோகிணி:

சனி பகவான் உங்களின் பதினெட்டாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சுக்கிரன் - சந்திரன் அம்சத்தில் பிறந்திருக்கும் நீங்கள் கவர்ச்சியான பேச்சின் மூலம் காரியங்களை சாதிக்கும் திறமை உடையவர்கள்.

இந்த சனிபெயர்ச்சியில் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சில்லறைச் சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப்பிடிப்பது நல்லது.

கலைத்துறையினர் சீரான பலனைக் காண்பார்கள். ஆனாலும் இரவு பகல் பாராமல் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். வரவு அதிகமாக இருக்கும். சிக்கனமாகச் செலவழிக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும்.

பெண்களுக்கு எந்தவொரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மஹாலக்ஷ்மியை மல்லிகைப்பூவால் அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுங்கள். காரிய வெற்றி உண்டாகும்.
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT