சிறப்பு பலன்கள்

விருச்சிகம் ; டிசம்பர் மாத பலன்கள் ; முயற்சி கைகூடும்; வீண் மனஸ்தாபம்; செலவுகள் கூடும்;  எதிலும் கவனம் தேவை! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசியில் கேது, சூர்யன், புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:

10-12-20 அன்று காலை 6.02 மணிக்கு செவ்வாய் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

12-12-20 அன்று மாலை 3.10 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

12-12-20 அன்று மாலை 3.43 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-12-20 அன்று காலை 3.09 மணிக்கு சூர்ய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

27-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

முன்கோபத்தைக் குறைத்து செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்டப் பாதையில் முன்னேற்றங்கள் விருச்சிக ராசிக்காரர்களே!

இந்த மாதம் வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. வழக்கத்தை விட செலவுகள் கூடும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவைச் சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும்போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.

பெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு தொழில்ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. வரவேண்டிய பண பாக்கிகள் மட்டும் இழுபறி நிலையிலேயே இருந்து வரும். இடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரை தவிர்த்துவிடுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

விசாகம் 4ம் பாதம்:

இந்த மாதம் பிள்ளைகளால் மருத்துவச் செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதுர்யத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும்.

அனுஷம்:

இந்த மாதம் உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

கேட்டை:

இந்த மாதம் புதிய வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவபெருமான், நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சினைகளில் சுமுக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 4, 29, 30, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24

******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT