- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது, சூர்யன், புதன் - ரண, ருண ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராகு, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
10-12-20 அன்று காலை 6.02 மணிக்கு செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-12-20 அன்று மாலை 3.10 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-12-20 அன்று மாலை 3.43 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-12-20 அன்று காலை 3.09 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
நிறைய யோசிக்கும் திறமையுடைய கடக ராசிக்காரர்களே!
நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும்போது நிதானம் தேவை.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்படச் செய்வார்கள். போட்டிகள் மறையும்.
குடும்பத்தில் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன்களைத் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும்.
பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்து கூடும். மனக் குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். அமைச்சர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.
கலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். சக கலைஞர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.
புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் எதிர்ப்புகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாகப் பேசுவது நன்மை தரும்.
பூசம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாகப் பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம்:
இந்த மாதம் சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.
பரிகாரம்:
அம்மனுக்கு பூஜை செய்து விரதம் இருந்து வேண்டிக் கொள்ளுங்கள். கஷ்டங்களைப் போக்கும். மனக் குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
***************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |