சிறப்பு பலன்கள்

ரேவதி நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்; காரிய தாமதம்; டென்ஷன்; திடீர் பிரச்சினைகள்; பண வரவில் தாமதம்! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரேவதி:

குரு பகவான் உங்களின் இருபத்தி நான்காவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதற்குத் தயங்காத ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

உங்களுக்குத் தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. இந்த குருப் பெயர்ச்சியில் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும்.

எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல், வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கலாம்.

கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். வீட்டில் உள்ள பொருட்களைக் கவனமாகப் பாதுகாப்பது நல்லது.

பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எந்தச் சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு எப்படி பாடங்களைப் படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். அரசியல்துறையினருக்கு காரியத் தடை, தாமதம் உண்டாகலாம்.

பரிகாரம்: சண்டிகேஸ்வரரை வழிபாடு செய்யுங்கள். நன்மைகளை அள்ளித் தரும். மன நிம்மதி அடைவீர்கள்.

மதிப்பெண்கள்: 75% நல்லபலன்கள் ஏற்படும்.

********

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT