- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
உத்திரட்டாதி:
குரு பகவான் உங்களின் இருபத்தி மூன்றாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்காத உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
பிரச்சினைகளைக் கண்டு பயப்படாதவர் நீங்கள். இந்த குருப்பெயர்ச்சியில் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும்.
மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளைக் கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும்.
கலைத்துறையினருக்கு கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல்துறையினருக்கு மனக்குழப்பம் நீங்கும்.
பரிகாரம்: குருமார்களை, மகான்களை வழிபட்டு வாருங்கள். நன்மைகளைத் தரும். மன அமைதி பெறுவீர்கள்.
மதிப்பெண்கள்: 72% நல்லபலன்கள் ஏற்படும்.
*********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |