சிறப்பு பலன்கள்

சதயம் நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்; செல்வம் சேரும்; பயண ஆதாயம்; துணிவு கூடும்; காரியத்தில் வெற்றி!

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சதயம்:

குரு பகவான் உங்களின் இருபத்தி ஐந்தாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல மற்றவர்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நான் செல்வதுதான் சரி என்று உறுதியாகக் கூறும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

இந்த குருப் பெயர்ச்சியில் காரிய அனுகூலங்கள் ஏற்படும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தைத் தரும்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ராகு பகவானை வழிபாடு செய்யுங்கள். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மதிப்பெண்கள்: 62% நல்லபலன்கள் ஏற்படும்.

*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT