சிறப்பு பலன்கள்

பூராட நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்; மனதில் உற்சாகம்; வீண் பகை; நட்பு முறியும்; கூடுதல் உழைப்பு!

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூராடம்:

குரு பகவான் உங்களின் இரண்டாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பதற்கேற்றவாறு எதைச் செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களைக் கணக்கிடும் குணம் உடைய பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியில் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களைக் கையாளும்போது கவனம் தேவை.

நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாகச் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம்.

பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண்அலைச்சல், கூடுதல் உழைப்பு ஆகியவை இருக்கும்.

குடும்பத்தில் ஏதாவது சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும்.

சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

மாணவர்கள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. பாடங்களைக் கவனமாகப் படிப்பது நல்லது.

பரிகாரம்: பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டு பிரார்த்தனை செய்யுங்கள். நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்ப்புகள் கட்டுக்குள் இருக்கும்..

மதிப்பெண்கள்: 67% நல்லபலன்கள் ஏற்படும்.

*************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT