சிறப்பு பலன்கள்

மூலம் நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்; மனதில் உறுதி; வாகனச் செலவு; பணியில் கவனம்; முயற்சியில் பலன்கள்! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மூலம்:

குரு பகவான் உங்களின் மூன்றாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப ஒரு பக்கம் சாதகமாகவும், மறுபக்கம் பாதகமாகவும் நடந்து கொள்ளாமல் ஒரே நிலையை கடைபிடிக்கும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியில் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.

லாபம் குறையக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது.

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன் மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு செலவு அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் பயணங்கள் செல்ல நேரலாம். மாணவர்கள் கவனத் தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களைப் படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்து வாருங்கள். தடைகளைத் தீர்க்கும். நன்மைகள் கிடைக்கும்

மதிப்பெண்கள்: 69% நல்லபலன்கள் ஏற்படும்.

***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT