சிறப்பு பலன்கள்

அனுஷம் நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்; மனக்கவலை; எதிர்பாராத செலவு; திருப்தி இல்லாத நிலை; கருத்து வேற்றுமை! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அனுஷம்:

குரு பகவான் உங்களின் ஐந்தாவது நட்சத்த்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

எதையும் தாங்கும் இதயம் என்பதற்கேற்றார் போல் எதைக்கண்டும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் இயல்பு உடைய அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியில் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம்.

இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

வாடிக்கையாளர்களிடம் கடுமையானப் பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.

பிள்ளைகளிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. அவர்கள் சொல்வதை உணர்ந்து புரிந்துகொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். கலைத்துறையினருக்கு மனக்கவலை ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய கவலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

பரிகாரம்: முன்னோர்களை வணங்கி ஆராதனை செய்து வழிபாடு செய்யுங்கள். முன்னேற்றத்தைத் தரும்.
மதிப்பெண்கள்: 70% நல்லபலன்கள் ஏற்படும்.

***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT