சிறப்பு பலன்கள்

ரோகிணி நட்சத்திரக்காரர்களே! குருப் பெயர்ச்சி பலன்கள்;  சுறுசுறுப்பானவர்; வாழ்க்கைத் துணையின் உடல்நலம்; திடீர் திருப்பம்!

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரோகிணி:

குரு பகவான் உங்களின் பதினெட்டாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

எடுத்தக் காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளை உடைய ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே.

நீங்கள் சுறுசுறுப்பானவர். இந்த குருப்பெயர்ச்சியில் செயல்திறன் மூலம் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.

உடல்நலபாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம். பணப் பற்றாக்குறை ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்கப் பாடுபடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதற்காக அலைய வேண்டி இருக்கலாம்.

குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடவேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு பணத்தேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் அலைச்சலைத் தரும்.

மாணவர்கள் கல்விக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். விளையாட்டில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மைதரும்.

பரிகாரம்: கிருஷ்ணர் வழிபாடு மனதில் அமைதியைக் கொடுக்கும். அருகில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள்.

மதிப்பெண்கள்: 78% நல்லபலன்கள் ஏற்படும்.

*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT