சிறப்பு பலன்கள்

கிருத்திகை நட்சத்திரக்காரர்களே! குருப் பெயர்ச்சி பலன்கள்;  விருப்பங்கள் நிறைவேறும்;  கோபம் வேண்டாம்; குடும்பத்தில் குழப்பம்! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கிருத்திகை:

குரு பகவான் உங்களின் பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

நல்லது கெட்டது என்று இரண்டையுமே சந்திக்கத் தயங்காத கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். இந்த குருப் பெயர்ச்சியில் உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும்போது கவனம் தேவை. எதிர்பாலினத்தவரால் லாபம் கிடைக்கும். வீட்டைவிட்டு வெளியில் தங்க நேரிடலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தைக் குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வருவதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கியபடியே இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது.

பெண்கள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மைதரும். கலைத்துறையினருக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

அரசியல்துறையினருக்கு ஏற்றம் காணப்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாகப் படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: சிவ வழிபாடு நன்மை தரும். முடியும் போதெல்லாம் சிவாலயம் சென்று தரிசித்து வாருங்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

மதிப்பெண்கள்: 72% நல்லபலன்கள் ஏற்படும்.

******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT