சிறப்பு பலன்கள்

துலாம், விருச்சிகம், தனுசு -  வார ராசிபலன்; ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்:

இந்த வாரம் தொழில் ராசிக்கு மாற இருக்கும் ராசிநாதனால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும்.

பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். கலைத்துறையினருக்கு சந்தோஷம் அதிகரிக்கும். அரசியல் துறையினருக்கு எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனைகள் அவசியம்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.


அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை வணங்கி வந்தால், கடன் பிரச்சினை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.

----------------------------------------------------

விருச்சிகம்:

இந்த வாரம் வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும்.

எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனால் மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.

குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். நிதானமாகச் செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை


அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 6, 9
பரிகாரம்: திருப்புகழ் பாராயணம் செய்து முருகப்பெருமானை வணங்கி வந்தால், கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்பக் கஷ்டம் தீரும்.


----------------------------------------------------

தனுசு:

இந்த வாரம் ராசியில் இருக்கும் கேது விரயஸ்தானத்திற்கு மாறுவதன் மூலம் மிகச் சிறந்த பலன்களைப் பெறப் போகிறீர்கள்.

பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்குக் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும்.

குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.

பெண்களுக்கு கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும்.

கலைத்துறையினருக்கு சொத்து சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.


அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று அம்பாளுக்கு முல்லை மலர் அர்ப்பணித்து வணங்கி வந்தால், எல்லா நன்மைகளும் உண்டாகும்.


********************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT