சிறப்பு பலன்கள்

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு ; ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


ரேவதி:

கிரகமாற்றம்:

01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு ஆறாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நக்ஷத்ரத்திற்கு பத்தொன்பதாம் நக்ஷத்ரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

" உத்தமனாய் இரு" என்பதை உணர்ந்த ரேவதி நட்சத்திர அன்பர்களே.

இந்த ராகு கேது பெயர்ச்சியால், எந்த இடத்தில் பேசும்போதும் கவனமாகப் பேசுவது நல்லது. வாக்குறுதிகளைக் கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும். தொழில் தொடர்பான அலைச்சல் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது மன அமைதியைத் தரும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாகப் பேசுவது நன்மை தரும்.

பெண்கள் எந்த நிலையிலும் மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியைத் தரும். வாக்குறுதிகளைத் தவிர்க்கவும்.
கலைத்துறையினர் ஒரு சில சிக்கலான கட்டங்களை சந்திக்க நேரிடும். ஆனால் முடிவில் எதிர்பார்த்தபடி சாதகமான பலன்கள் கிடைக்கும். கூடுதலான லாபம் கிடைக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல்துறையினருக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். கட்சியில் நிம்மதி உண்டாகும். உடல்நிலையில் கவனம் தேவை.

மாணவர்கள் யாருக்கும் உத்திரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

மதிப்பெண்: 72%

தெய்வம்: திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வருவதால் நன்மைகள் ஏற்படும்.


+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால், தன சேர்க்கை ஏற்படும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT