பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
உத்திரட்டாதி:
கிரகமாற்றம்:
01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏழாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபதாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
" வல்லமை பேசேல்" என்பதை உணர்ந்த உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே.
நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். இந்த ராகு கேது பெயர்ச்சியால், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் சாதகமான பலன்களைத் தரும்.
தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுர்யத்தால் அலுவலக வேலைகளை திறமையாகச் செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்கவோ அல்லது புதிதாக வாங்கும் முயற்சியிலோ ஈடுபடுவீர்கள். அதில் சாதகமான பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு மனக் குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியைத் தரும்.
கலைத்துறையினர் எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும். மற்றவர்கள் மத்தியில் உங்களது பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்காது. எனவே அறிவுரைகள் கூறுவதைத் தவிர்ப்பது நல்லது.
அரசியல்துறையினர் சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள். ஆனால் மனதில் ஏதாவது குறை இருந்துகொண்டே ஏற்படும். எனினும் திறமையாக செயல்படுவீர்கள்.
மாணவர்கள் புத்தி சாதுர்யத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.
மதிப்பெண்: 68%
தெய்வம்: ஸ்ரீகாளி தேவியை வழிபட்டு வருவதால் பொறுப்புகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்
+ : மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சியால், பொறுப்புகள் அதிகரிக்கும்
*************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |