பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சதயம்:
கிரகமாற்றம்:
01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு ஒன்பதாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி இரண்டாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
" பெரியாரைத் துணைக் கொள்" என்பதை உணர்ந்த சதயம் நட்சத்திர அன்பர்களே.
இந்த ராகு கேது பெயர்ச்சியால், எதிர்பார்த்த நல்ல பலன்கள் உண்டாகும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களைச் சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும்.
தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து உற்சாகமாகக் காணப்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றி பெறுவதால் மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.
கலைத்துறையினரின் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். எதைச் செய்தாலும் அதில் கவனமாக இருப்பது நல்லது. கடின உழைப்பும் நேர்மையான போக்கும் உங்களைக் காக்கும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனசஞ்சலம் நீங்கி நிம்மதி உண்டாகும். பெரியோர் பாராட்டு கிடைக்கும்.
மதிப்பெண்: 76%
தெய்வம்: பைரவரை வழிபட்டு வாருங்கள். நன்மைகள் வந்து சேரும்.
+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால், உடல்நலம் முன்னேறும். ஆரோக்கியம் கூடும்.
********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |