பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அவிட்டம்:
கிரகமாற்றம்:
01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பத்தாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி மூன்றாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
" புகழ்ந்தாரைப் போற்றி வாழ் " என்பதை உணர்ந்த அவிட்டம் நட்சத்திர அன்பர்களே.
இந்த ராகு கேது பெயர்ச்சியால், மனதில் இருந்த டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். விரும்பியபடி காரியங்கள் நடக்கும். நீண்ட தூரத் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்கெனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்கப் பெறலாம்.
குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியைத் தரும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும்.
கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். ரசிகர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வாய்ப்பு தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அரசியல்துறையினருக்கு எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை காணப்படும். மற்றவர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.
மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்.
மதிப்பெண்: 72%
தெய்வம்: நவக்கிரகங்களை வழிபட்டு வருவதால் சிரமங்கள் அகலும்.
+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால் சொத்துகள் சேரும்.
*********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |