சிறப்பு பலன்கள்

திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு ; ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

திருவோணம்:

கிரகமாற்றம்:

01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினொன்றாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி நான்காம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

" நேர்பட ஒழுகு" என்பதை உணர்ந்த திருவோணம் நட்சத்திர அன்பர்களே.

நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுவதில் வல்லவர். இந்த ராகு கேது பெயர்ச்சியால், பண வரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக எந்தப் பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. மற்றவர்களுக்காக வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் குறையலாம். வியாபாரம் தொடர்பான பண பரிவர்த்தனையில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினை தீரும். ஆனால் வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
பெண்கள் மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும்.

கலைத்துறையினர் திட்டமிட்டு காரியங்களைச் செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்களின் செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும், மனச் சோர்வும் உண்டாகும். மேலிடத்தின் செயல்கள் நிம்மதியைப் பாதிப்பதாக இருக்கும். வீண் செலவு, சிறு பிரச்சினைகள் உண்டாகும் நிலை வரலா. கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மன திருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.

மதிப்பெண்: 68%

தெய்வம்: ஸ்ரீநிவாச பெருமாளை வழிபட்டு வருவதால் சுபநிகழ்வுகள் நடக்கும்.

+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால் திருமணம் வாய்க்கும். சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடந்தேறும்.

************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT