பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மூலம்:
கிரகமாற்றம்:
01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினான்காம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி ஏழாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
" நன்மை கடைப்பிடி" என்பதை உணர்ந்த மூலம் நடத்திர அன்பர்களே.
இந்த ராகு கேது பெயர்ச்சியால், காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும்போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தைத் தருவதாக இருக்கலாம். கவனமாகக் கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம். கவனம் தேவை.
பெண்களது பொருள்களைக் கவனமாகப் பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.
அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு பின்னர் நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாகச் செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். அடுத்தவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
மதிப்பெண்: 75%
தெய்வம்: சித்தர்களை வழிபட்டு வருவதால் நன்மைகள் ஏற்படும்.
+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சி, புதிய முயற்சிகள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றியைத் தரும்.
******************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |