சிறப்பு பலன்கள்

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு ; ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

உத்திரம்:

கிரகமாற்றம்:

01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி ஒன்றாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏழாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

"விருந்தும் மருந்தும் மூன்று நாளே" என்பதை உணர்ந்த உத்திரம் நட்சத்திர அன்பர்களே.

இந்த ராகு கேது பெயர்ச்சியால், எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதேநேரத்தில் பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்துவந்த கருத்து மோதல் அகலும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைத் தரும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்தப் பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்.
பெண்கள் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.
கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுர்யம் மூலம் காரியத்தில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

அரசியல் துறையினருக்கு பாராட்டுகள் கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மிக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற தடைகளைத் தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.

மதிப்பெண்: 74%

தெய்வம்: ஐயப்பனை வழிபட்டு வருவதால் குடும்பத்தில் நன்மைகள் ஏற்படும்.

+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகம் கூடும்.

*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT