சிறப்பு பலன்கள்

பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு ; ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூரம்:

கிரகமாற்றம்:

01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி இரண்டாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு எட்டாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

"விதி எப்படியோ மதி அப்படி" என்பதை உணர்ந்த பூரம் நட்சத்திர அன்பர்களே.

இந்த ராகு கேது பெயர்ச்சியால், சிற்றின்பச் செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம்.

கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.
தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.

குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சினை தலை தூக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், பிள்ளைகள் என்று எவரிடமும் வீண் சண்டையைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம். சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும்.

பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாகச் செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.

அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம் இது. புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம்.

மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

மதிப்பெண்: 78%

தெய்வம்: மஹாலக்ஷ்மியை வழிபட்டு வருவதால் நன்மைகள் நடக்கும்.

+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால், உங்களின் கடன்கள் அடையும். சேமிக்கத் தொடங்குவீர்கள்.

******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT