பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகம்:
கிரகமாற்றம்:
01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி மூன்றாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு ஒன்பதாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
"வாயுள்ள பிள்ளை பிழைக்கும்" என்பதை உணர்ந்த மகம் நட்சத்திர அன்பர்களே.
இந்த ராகு கேது பெயர்ச்சியால், நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும்போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவப் போய் வீண் பழி ஏற்படலாம், கவனம் தேவை. உங்களைச் சார்ந்தவர்களே உங்களைத் தவறாக நினைக்கலாம்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதிதாக இடம் வாங்குவீர்கள்.
உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துகளை தெரிவிக்கும்போது கவனமாகப் பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.
குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது முக்கியம்.
பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சினை உண்டாகலாம். கவனம் தேவை.
அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பண பாக்கியும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாகச் செல்வது நல்லது.
மதிப்பெண்: 72%
தெய்வம்: விநாயகரை வழிபடுவதால் தொழிலில் லாபம் அதிகரிக்கும்
+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால் தொழில் சிறக்கும். லாபம் அதிகரிக்கும்.
*********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |