சிறப்பு பலன்கள்

பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு ; ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூசம்:

கிரகமாற்றம்:

01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி ஐந்தாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினொன்றாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

"மெளனம் மலையை சாதிக்கும்" என்பதை உணர்ந்த பூசம் நட்சத்திர அன்பர்களே.

இந்த ராகு கேது பெயர்ச்சியால், சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பண வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களைப் பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதை விட்டு விலகிவிடுவார்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சினை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டங்களெல்லாம் குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகப் பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
குடும்பத்தில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடையத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.

பெண்கள் மற்றவர்களிடம் கவனமாகப் பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும்.
கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் - வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.

அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

மதிப்பெண்: 78%

தெய்வம்: பழநி முருகனை வழிபட்டு வருவதால் வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.

+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால் பொறுப்புகள் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை நிகழும்.

***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT