பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிருகசீரிஷம்:
கிரகமாற்றம்:
01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினான்காம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
"முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்" என்பதை உணர்ந்த மிருகசீரிஷம் நட்சத்திர அன்பர்களே.
இந்த ராகு கேது பெயர்ச்சியால், வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும்.
தொழில் வியாபாரத்தில் பங்குதாரர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்குத் தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகப் பணிகளை செய்து முடிப்பார்கள். தற்காலிக பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம்.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்குழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காகப் பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம்.
பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரியத் தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
கலைத் துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.
அரசியல் துறையினர் மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவியும் பதவி உயர்வும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மதிப்பெண்: 82%
தெய்வம்: முருகப்பெருமானை வழிபட்டு வருவதால் தைரியம் அதிகரிக்கும்.
+ : சுபவிரயம் உண்டாகும். அதாவது இந்த ராகு - கேது பெயர்ச்சியால் மங்கல காரியங்கள் நடந்தேறும்.
******************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |