சிறப்பு பலன்கள்

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு ; ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரோகிணி:

கிரகமாற்றம்:

01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இரண்டாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினைந்தாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

"முகத்துக்கு முகம் கண்ணாடி" என்பதை உணர்ந்த ரோகிணி நட்சத்திர அன்பர்களே.

இந்த ராகு கேது பெயர்ச்சியால், மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண் கவலை நீங்கும். காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். காரியங்கள் சாதகமாகும் நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்த கவலை உண்டாகலாம்.

பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும்.

கலைத் துறையினருக்கு எல்லா நன்மைகளும் தடையின்றி நடக்கும். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருமானத்தால் கடன் அடைபடும்.

அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்த முயற்சியையும் தயக்கமின்றிச் செய்யலாம். நட்பு வட்டம் பெருகும். எதிரிகள் விலகிச்செல்வார்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

மதிப்பெண்: 81%

தெய்வம்: குருவாயூரப்பனை வழிபட்டு வருவதால் மங்கல காரியங்கள் நல்லதாக நடைபெறும்

+ : மொத்தத்தில், ராகு - கேது பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல நல்ல மாற்றங்கள் ஏற்படும். மனோபலம் பெருகும்.

***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT