பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிருத்திகை:
கிரகமாற்றம்:
01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு மூன்றாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினாறாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
"மனம் போல வாழ்வு" என்பதை உணர்ந்த கிருத்திகை நட்சத்திர அன்பர்களே.
நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காதவர். இந்த ராகு கேது பெயர்ச்சியால், நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
பெண்களுக்கு காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். செயல்கள் அனைத்தும் சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.
கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துகளை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.
அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.
மதிப்பெண்: 76%
தெய்வம்: சிவபெருமானை வழிபடுவதால் தடைகள் அகலும்.
+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால் மனோபலம் அதிகரிக்கும்.
************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |