- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
துணிச்சலாக எதையும் செய்து வெற்றி பெறும் சிம்ம ராசியினரே.
இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் சஞ்சாரத்தால் வீண் அலைச்சல் காரியத் தடை ஆகியவை அகலும். சுக்கிரனால் தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள் உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உடல் சோர்வும், மனக் குழப்பமும் நீங்கும். செலவு கட்டுக்குள் இருக்கும்.
தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும்.
குடும்பாதிபதி புதனின் சஞ்சாரத்தின் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாகப் பேசி பழகுவது நல்லது.
பெண்களுக்கு : உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் கூடும்.
கலைத்துறையினருக்கு : வாகனங்களை உபயோகப்படுத்தும்போது கவனம் தேவை. பிரச்சினைகள் மற்றும் விவகாரங்களில் ஆலோசனைகளைச் செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரியத் தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும்.
அரசியல்துறையினருக்கு : காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கவனமாகச் செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு : கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.
மகம்:
உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.
பூரம்:
எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தாமதப்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவில் நெருக்கடிகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அனைவரையும் அனுசரித்துச் செல்ல பழகிக் கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது.
உத்திரம் 1ம் பாதம்:
எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும்.உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படவும். எனினும் உங்கள் சமயோஜித புத்தியால் அனைத்தையும் சமாளிப்பீர்கள்.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்;
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |